பருத்தி ஏலம் குறித்த கலந்துரையாடல் கூட்டம்

நன்னிலம் அருகே பருத்தி ஏலம் குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடந்தது

Update: 2022-06-11 17:32 GMT

நன்னிலம்:

நன்னிலம் அருகே மூங்கில்குடியில் அமைந்துள்ள பூந்தோட்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் பருத்தி ஏலம் நடக்கிறது. இது தொடர்பாக விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நேற்று மூங்கில் குடிஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலகத்தில் நடைபெற்றது.மாவட்ட விற்பனைக் குழு செயலாளர் மாஸ் அரசு மற்றும் பூந்தோட்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் முருகானந்தம், விவசாயிகள் சார்பில் ஊராட்சி தலைவர் கார்த்திகேயன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் 14-ந் தேதி பருத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம். பருத்தியை ஈரப்பதமும் தூசியும் இல்லாமல் எடுத்து வந்தால் அதிக விலைக்கு விற்று பயன்பெறலாம் என அதிகாரிகள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்