கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்
கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதற்கு விற்பனை கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலை வகித்தார். ஏலத்திற்கு கும்பகோணத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் 4200 குவின்டால் பருத்தியை கொண்டு வந்தனர். இதில் கும்பகோணம், பண்ருட்டி, திருப்பூர், கதிராமங்கலம், தேனி, விழுப்புரம் மற்றும் செம்பனார்கோவிலை சேர்ந்த 15 வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தி ஏலம் கேட்டனர். ஏலத்தில் குவிண்டால் அதிகபட்சமாக ரூ.10,429-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 8 ஆயிரத்து 9-க்கும் விலைபோனது.