ராசிபுரத்தில் 1,413 மூட்டை பருத்தி ரூ.46 லட்சத்துக்கு ஏலம்

ராசிபுரத்தில் 1,413 மூட்டை பருத்தி ரூ.46 லட்சத்துக்கு ஏலம் போனது.

Update: 2022-08-11 18:22 GMT

ராசிபுரம், ஆக.12-

பருத்தி ஏலம்

ராசிபுரம் அருகே பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் முத்துக்காளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்களாந்தபுரம், முருங்கப்பட்டி, குருசாமிபாளையம், அம்மாபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.

ரூ.46 லட்சத்துக்கு விற்பனை

ஆர்.சி.எச். ரக பருத்தி 785 மூட்டைகளும், சுரபி ரக பருத்தி 582 மூட்டைகளும், கொட்டு ரக பருத்தி 46 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.9,412-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.12,039-க்கும், சுரபி ரகப பருத்தி குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.9,812-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.11,640-க்கும், கொட்டு ரக பருத்தி குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.6,035-க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.8,935-க்கும் ஏலம் போனது. மொத்தம் 1,413 மூட்டை பருத்தி ரூ.46 லட்சத்துக்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் பருத்தி விலை அதிகரித்து ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்