அரூரில் ரூ.60 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

Update: 2023-02-20 18:45 GMT

அரூர்:

அரூர் வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வந்தனர்.

மொத்தம் 2 ஆயிரத்து 100 மூட்டை பருத்தி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 609 முதல் ரூ.8 ஆயிரத்து 366 வரையும், டி.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 109 முதல் ரூ.8 ஆயிரத்து 509 வரையும் ஏலம் போனது.

மொத்தம் ரூ.60 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடந்ததாக செயலாளர் அறிவழகன் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்