தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுவது அம்பலமாகியுள்ளது - அண்ணாமலை
தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுவது அம்பலமாகியுள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை,
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 40க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுவது அம்பலமாகியுள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,
கள்ளச்சாராயம் விற்பனை அணைத்து காவல்துறைக்கும் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை எனவும் மது விலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தெரியாமல் இத்தனையும் நடந்திருக்குமா எனவும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு நெருக்கமானவரே மரக்காணம் துயர சம்பவத்திற்கு காரணம் . என்று தெரிவித்துள்ளார்.