பொதுமக்கள் பேசும் அளவுக்கு ஊழல் அதிகரித்து வருகிறது - அண்ணாமலை பேட்டி
பொதுமக்கள் பேசும் அளவுக்கு ஊழல் அதிகரித்து வருகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
கவர்னர் ஆன்லைன் சூதாட்ட உரிமையாளர்களை சந்தித்தது குறித்து எங்களுக்கு தெரியாது. ஆன்லைன் சூதாட்டத்தை முறைப்படுத்த வேண்டும், தடை செய்ய வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தீர்வு வேகமாக கிடைக்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. பொதுமக்கள் பேசும் அளவுக்கு ஊழல் அதிகரித்து வருகிறது. அடுத்த ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.
அரசியலில் அதர்ம வழியில் சென்றால் கடைசியில் பூஜ்யம் தான்.சிறுபான்மையின மாணவருக்கான கல்வி உதவித்தொகை வேறொரு திட்டத்தின் பெயரில் வழங்கப்படுகிறது. மழை, வெள்ள பாதிப்பு விவகாரத்தில் பாஜக அரசியல் செய்யாது என்றார்.