கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் மாநகராட்சி அதிகாரிகள் ஆஜராக வேண்டும்

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் மாநகராட்சி அதிகாரிகள் ஆஜராக வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு.

Update: 2022-11-13 18:37 GMT

சென்னை,

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம். இவரது மனைவி மல்லேஸ்வரி, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், "சென்னை மாநகராட்சி பிறப்பு, இறப்பு பதிவேட்டில் மகேஷ்வரி என்று என் பெயர் பதிவாகியுள்ளது. இந்த பெயரை மல்லேஸ்வரி என்று மாற்றி பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சரியான பெயரை பதிவு செய்யும்படி கடந்த 2020-ம் ஆண்டு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை மாநகராட்சி அதிகாரிகள் இதுவரை அமல்படுத்தவில்லை. எனவே, அவர்கள் மீது கோர்ட்டு அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர், சென்னை மாநகராட்சி சுகாதார அதிகாரிமற்றும் மண்டல சுகாதார அதிகாரியை நேரில் ஆஜராக உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்