மாநகராட்சி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மாநகராட்சி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஓசூர்:-
தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஓசூர் மாநகராட்சி அலுவலகம் நுழைவு வாயில் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. துப்புரவு பணியாளர் சங்க தலைவர் சிவா தலைமை தாங்கினார். துணை தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க ஓசூர் கிளை தலைவர் சுரேஷ்குமார் வரவேற்றார். இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் கலந்து கொண்டு பேசினார். இதில் மாநகராட்சியின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த அலுவலர்கள், ஊழியர்கள் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை 3 ஆயிரத்து 417 ஆக குறைக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளதை கண்டித்தும், ஓசூர் மாநகராட்சியில் சுமார் 10 வருடங்களாக தற்காலிகமாக பணி செய்த 88 பேருக்கு பென்சன் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.