மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் தர்ணா

மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-14 20:13 GMT

திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட வார்டுகளில் தற்காலிக துப்புரவு ஊழியர்களாக பணிபுரியும் சுமார் 40 பெண்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று காலை திடீரென ஒன்று கூடி தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மாநகராட்சி தின கூலியாக ரூ.570 வழங்கியதை வேதா நிறுவனம் பொறுப்பு ஏற்ற பிறகு ரூ.430 ஆக மாற்றி விட்டது. எனவே, தங்களுக்கு உரிய தினக்கூலி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனையடுத்து. அவர்களிடம் வேதா நிறுவனத்தின் சார்பில் அதன் அலுவலக மேற்பார்வையாளர் கிஷோர் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், எவ்வித உடன்பாடும் ஏற்படாததால் ஸ்ரீரங்கம் மண்டல மாநகராட்சி உதவி ஆணையர் வைத்தியநாதன், ஸ்ரீரங்கம் பகுதி தி.மு.க. செயலாளர் ராம்குமார், கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அமைச்சர் கே.என்.நேரு தற்செயலாக அந்த வழியாக வந்து கொண்டிருந்தபோது இந்த சம்பவத்தை பார்த்தார். உடனே அவர் காரை நிறுத்த சொல்லி காரை விட்டு கீழே இறங்கி தொழிலாளர்களிடம் என்ன பிரச்சினை என்று கேட்டார். அவர்களின் கோரிக்கைகளை கேட்ட அமைச்சர் உங்களுக்குரிய ஊதியம் கிடைக்கும் என கூறினார். இதையடுத்து மகிழ்ச்சியடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்