ஒரே நாளில் 49,576 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஒரே நாளில் 49,576 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தமிழகமெங்கும் கொரோனாவை தடுக்கும் வகையில் 36-வது சுற்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் மாநகரில் 600 இடங்கள் உள்பட மொத்தம் 1,831 இடங்களில் இந்த முகாம் நடைபெற்றது. காலை 7 மணி முதல் நடைபெற்ற இம்முகாம்களில் மாவட்டம் முழுவதும் 49,576 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதில் கோவிஷீல்டு முதல் தவணை செலுத்திக்கொண்ட 1,965 பேரும், இரண்டாவது தவணை செலுத்திக்கொண்ட 10,167 பேரும், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 31,256 பேரும் மற்றும் கோவாக்சின் முதல் தவணை செலுத்திக்கொண்ட 199 பேரும், இரண்டாவது தவணை செலுத்திக்கொண்ட 2,064, பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்ட 3,563 பேரும் அடங்குவர்.