ஈரோடு மாவட்டத்தில் நடந்த முகாமில் 25,667 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்- சுகாதாரத்துறையினர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் நடந்த முகாமில் 25,667 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்- சுகாதாரத்துறையினர் தகவல்

Update: 2022-09-12 20:19 GMT

ஈரோடு

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் உள்பட 1,597 மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடந்தது.

இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதேபோல் 18 வயதுக்கு மேற்பட்ட 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் இலவசமாக போடப்பட்டது. இந்த பணியில் மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 196 பணியாளர்கள் ஈடுபட்டனர். 70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட்டது. நேற்று முன்தினம் நடந்த முகாமில் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 448 பேரும், 2-ம் தவணை தடுப்பூசியை 13 ஆயிரத்து 459 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 11 ஆயிரத்து 760 பேரும் என மொத்தம் 25 ஆயிரத்து 667 பேர் செலுத்தி கொண்டதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்