கொரோனா தடுப்பூசி முகாம்

திருவையாறு கோர்ட்டில் கொரோனா தடுப்பூசி முகாம்

Update: 2022-05-30 19:02 GMT

திருவையாறு:

திருவையாறு ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில், நீதித்துறை நடுவர் ஹரிராம் முன்னிலையில் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதி சந்திரசேகரன் தலைமையில் நடுக்காவேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வகுமார், ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் தடுப்பூசி முகாமை நடத்தினர். இதில், கோர்ட்டு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். முகாமில் வக்கீல்கள் சங்க தலைவர் சுப்ரமணியன், அரசு வக்கீல் என்.ஆர்.ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்