ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மீண்டும் தொடக்கம்
ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மீண்டும் தொடங்கியது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் உள்ளது. இதையொட்டி மாநிலம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முன்எச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த வகையில், ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து தலைமை டாக்டர் பரமசிவம் மற்றும் மருத்துவக்குழுவினர், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். இந்தநிலையில் 2 நாட்கள் மேற்கொள்ளபட்ட பரிசோதனையில் ஆண்டிப்பட்டியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.