தமிழ்நாட்டில் கொரோனா விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டா

Update: 2022-12-28 10:32 GMT

திருச்சி,

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது ;

சீனாவில் இருந்து மதுரை வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது .இருவரும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இருவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் சோதனை செய்யப்பட்டுள்ளது.துபாயில் இருந்த வந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று பாதித்தவர்களின் மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஓவியத்திற்காக ரத்தம் - பாதுகாப்பாக இல்லை" .'பிளட் ஆர்ட்' முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று, கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.ஓவியத்திற்காக ரத்தம் எடுக்கும்போது, பாதுகாப்பற்ற முறையில் உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை; புதிய வகை கொரோனா எந்த வித பாதிப்பை ஏற்படுத்தும் என தெரியவில்லை; பாதிப்புகள் குறையவில்லை எனில், கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்