குமரியில் புதிதாக 40 பேருக்கு கொரோனா

குமரியில் புதிதாக 40 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

Update: 2022-06-26 18:13 GMT

நாகர்கோவில்:

குமரியில் புதிதாக 40 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்த தமிழக அரசு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் தொற்று பரிசோதனையை அதிகாரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 818 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்