பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களில் நேற்று 2 பேர் குணமாகி உள்ளனர். மாவட்டத்தில் தற்போது 46 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 41 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.