கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனா

Update: 2022-09-26 18:45 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 24 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 23 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 62 ஆயிரத்து 178 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 61 ஆயிரத்து 629 பேர் குணமாகி உள்ளனர். தற்போது 177 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பால் இதுவரை 372 பேர் இறந்துள்ளனர்.

மேலும் செய்திகள்