சேலம் மாவட்டத்தில் 44 பேருக்கு கொரோனா

சேலம் மாவட்டத்தில் நேற்று 44 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

Update: 2022-08-27 22:36 GMT

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 25-ந் தேதி 39 பேரும், நேற்று முன்தினம் 40 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், நேற்று மேலும் 4 பேர் அதிகரித்து புதிதாக 44 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியில் 15 பேர், வீரபாண்டி, காடையாம்பட்டியில் தலா 5 பேர், ஓமலூர், மேச்சேரி, பனமரத்துப்பட்டி பகுதியில் தலா 3 பேர், எடப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி பகுதியில் தலா 2 பேர், ஆத்தூர், கொங்கணாபுரம் நங்கவள்ளி, சங்ககிரி பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்