சேலம் மாவட்டத்தில் 68 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் நேற்று 68 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 70 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டது. நேற்று புதிதாக 68 பேருக்கு கொரோனா பாதித்து இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டு குணம் அடைந்த 96 பேர் நேற்று டிஸ்சார்ஜ் ஆகினர். 491 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.