சேலம் மாவட்டத்தில் 70 பேருக்கு கொரோனா

சேலம் மாவட்டத்தில் 70 பேருக்கு நேற்று கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2022-07-26 22:33 GMT

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 71 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று கொரோனாவுக்கு 70 பேர் பாதிக்கப்பட்டனர். சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 13 பேர், வீரபாண்டியில் 5 பேர், கொளத்தூரில் 4 பேர், அயோத்தியாப்பட்டணம், மேட்டூர் ஆகிய இடங்களில் தலா 2 பேர், சேலம் ஒன்றியம், ஓமலூர், கொங்கணாபுரம், ஆத்தூர், பனமரத்துப்பட்டி, ஏற்காடு ஆகிய இடங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் சேலம் மாவட்டத்துக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 38 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் உள்பட கொரோனாவால் பாதிக்கப்பட்ட 519 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்