அமராவதி ஆற்றில் முதலை

மணலூர் செல்லாண்டியம்மன் கோவில் அருகே அமராவதி ஆற்றில் உள்ள முதலையை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-01-06 18:28 GMT

மணலூர் செல்லாண்டியம்மன் கோவில் அருகே அமராவதி ஆற்றில் உள்ள முதலையை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதலை

மூலனூர் அருகே கன்னிவாடி பேரூராட்சிக்கு உட்பட்ட மணலூர் அமராவதி ஆற்றின் கரையோரம் செல்லாண்டி அம்மன் கோவில் உள்ளது. அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் திருப்பூர் மாவட்டத்தை கடந்து வடகரை என்னும் இடத்தில் கரூர் மாவட்ட எல்லைக்குள் வந்து திருமுக்கூடலூர் என்னுமிடத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது. அமராவதி ஆற்றில் கடந்த 6 மாதமாக ஆற்றில் தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் மணலூர் பகுதியில் நேற்று முன்தினம் காலை 11:45 மணி அளவில் அமராவதி ஆற்றில் முதலை இருப்பதை பொதுமக்கள் பார்த்துள்ளனர். மேலும் ஒரு சிலர் அதனை வீடியோ எடுத்து வாட்ஸ்-அப்பில் வெளியிட்டனர். இதனால் அமராவதி ஆற்றின் அருகே செல்ல அந்த பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சிலர் முதலையை பார்த்து ஓட்டம் பிடித்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த கன்னிவாடி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக மணலூர் செல்லாண்டி அம்மன் கோவில் முன்பாக ஆற்றுக்குள் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் எனவும் பொதுமக்கள் பத்திரமாக இருக்க வேண்டும் எனவும் விளம்பர பதாகை வைக்கப்பட்டது.

தேடுதல் வேட்டை

இது தொடர்பாக கொடுக்கப்பட்ட தகவலின் பெயரில் உடுமலை வன சரகத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த இடத்தில் முதலையை பிடிக்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொண்டனர். ஆற்றில் தண்ணீர் அதிகம் இருப்பதால் வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து முதலையை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்