வெம்பக்கோட்டை அகழாய்வில் ஆண்-பெண் உருவ செப்பு நாணயம், சங்கு வளையல் கண்டெடுப்பு
வெம்பக்கோட்டை அகழாய்வில் ஆண்-பெண் உருவ செப்பு நாணயம், சங்கு வளையல் கண்டெடுப்பு.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் பகுதியில் அகழாய்வு நடந்து வருகிறது. இதில் பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்து வருகின்றன. இங்கு கிடைக்கும் பொருட்கள் அடிப்படையில் இப்பகுதியில் பழங்காலத்தில் தமிழர் நாகரிகம் சிறந்தோங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் நேற்றைய அழகாய்வு பணியின்போது சுடுமண்ணால் ஆன முத்திரை, சங்கு வளையல், ஆண், பெண் உருவம் பொறித்த செப்பு நாணயம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.