ஸ்ரீவில்லிபுத்தூரில் செப்பு தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் செப்பு தேரோட்டம் நடைபெற்றது.

Update: 2023-06-28 19:32 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இங்குள்ள பெரியாழ்வார் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று திருவிழா நடைபெறும். அதேபோல இந்த ஆண்டு கடந்த 21-ந் தேதியன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தினமும் பெரியாழ்வார் வீதி உலா நடைெபற்றது.

இதையடுத்து நேற்று காலை 6 மணிக்கு பெரியாழ்வார் கோவிலில் இருந்து புறப்பட்டு கீழ ரதி வீதியில் உள்ள செப்பு தேரில் எழுந்தருளினார். பிறகு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுத்தனர். நான்கு ரத வீதி வழியாக தேர் வந்தது. இதில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்