அரிசி ஆலைகளில் குடிமைப்பொருள் வழங்கல் போலீசார் ஆய்வு
திருவாரூரில் உள்ள அரிசி ஆலைகளில் குடிமைப்பொருள் வழங்கல் போலீசார் ஆய்வு செய்தனர்.
திருவாரூர்;
குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மேற்பார்வையில் தஞ்சை சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகளில் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன் படி திருவாரூரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமை காவலர் சுரேஷ் ஆகியோர் திருவாரூர் தாலுகாவில் அரிசி ஆலைகளில் நேற்று ஆய்வு நடத்தினர். அப்போது நெல் சரியான முறையில் அரவை செய்யப்படுகிறதா? முறைகேடு ஏதும் நடக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.