மின்-குடிநீர் வினியோகம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

மின்-குடிநீர் வினியோகம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடந்தது.

Update: 2023-04-29 19:11 GMT

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் மாவட்ட அளவிலான மின் வினியோகம் மற்றும் குடிநீர் வினியோகம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊரக பகுதிகளில் மின் வினியோகம் மற்றும் குடிநீர் வினியோகம் தொடர்பாக ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். மற்றும் குடிநீர் திட்டப்பணிகள் தமிழ்நாடு குடிநீர் வாரியத்துடன் இணைந்து குடிநீரை தங்க தடையின்றி வழங்க வேண்டும் போன்றவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்