கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் 21-ந் தேதி முதல் வேலைநிறுத்தம்
சேத்தியாத்தோப்புகூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் 21-ந் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
சேத்தியாத்தோப்பு:
சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் கூட்டம் ஆலை முன்பு நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு தலைவர் வேலவன் தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஆலை தொழிலாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 21-ந் தேதி தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தொழிலாளர்கள் அனைவரும், தங்களது கோரிக்கையை நிறைவேற்றக்கோரி கோஷமிட்டு, கலைந்து சென்றனர்.