குன்னூர் தந்தி மாரியம்மன் தேர்த்திருவிழா:முளைப்பாரி எடுத்து வந்து பெண்கள் நேர்த்திக்கடன்

குன்னூர் தந்தி மாரியம்மன் தேர்த்திருவிழா: முளைப்பாரி எடுத்து வந்து பெண்கள் நேர்த்திக்கடன்

Update: 2023-05-08 19:00 GMT

குன்னூர்

குன்னுார் மேல் கடைவீதியில் உள்ள தந்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சித்திரை திருவிழாவையொட்டி தேர்த்திரு விழா கடந்த மாதம் 7-ந் தேதி தொடங்கி கடந்த ஒரு மாத காலமாக விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் தேர் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது கிராமிய நடனங்களாக தப்பாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், கடவுள் வேடங்கலிட்டு, பெண்கள் மற்றும் ஆண்கள் ஆடல் பாடலுடன் மேளதாளம் முழங்க ஏராளமானோர் முளைப்பாரி எடுத்து ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.மதுரை வீரர் வேடமணிந்தவர் குதிரையில் வலம் வந்து தத்ரூபமாக கலந்து கொண்டது அனைவரையும் கவர்ந்தது. முன்னதாக ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். சுப்ரமணிய சுவாமி கோவிலில் தொடங்கிய ஊர்வலம் பஸ் நிலையம் மவுண்ட் ரோடு வழியாக மாரியம்மன் கோவிலை அடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்