விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
கொள்ளிடம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
கொள்ளிடம்;
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள அகரஎலத்தூர் கிராமம் புதுத்தெருவை சேர்ந்தவர் ரகு(வயது46). தொழிலாளி. குடும்ப பிரச்சினை காரணமாக மிகுந்த மனஉளைச்சலில் இருந்த ரகு சம்பவத்தன்று வயலுக்கு தெளிக்க வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்திளர் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திாியில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி ரகு உயிரிழந்தார். இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.