சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2023-01-20 20:54 GMT

தஞ்சாவூர்;

சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

சிறுமிக்கு பெண் குழந்தை

தஞ்சையை அடுத்த திருவையாறு தாலுகாவில் உள்ள பவனமங்கலம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கவுதமன்(வயது 44). செங்கல் சூளை தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது.இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்கு முன்பு 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை வாழை தோட்டத்துக்கு பல முறை அழைத்துச்சென்று கவுதமன் பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் கர்ப்பமான அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

கைது

ஆனால் அந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை. அதனால் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என கவுதமன் மறுத்து விட்டார். இது குறித்து திருவையாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார்.அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணமல்லி விசாரணை செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கவுதமனை கைது செய்தார்.

20 ஆண்டுகள் சிறை

பின்னர் கைது செய்யப்பட்ட கவுதமனை தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி சுந்தர்ராஜன் விசாரணை செய்து கவுதமனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.மேலும் அவர், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்தார்.இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்