தடுப்புசுவரில் மோட்டார் சைக்கிள் மோதி சமையல் மாஸ்டர் பலி

பாளையங்கோட்டையில் தடுப்புசுவரில் மோட்டார் சைக்கிள் மோதி சமையல் மாஸ்டர் பலியானார்.

Update: 2022-06-25 18:34 GMT

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 45). சமையல் மாஸ்டர். இவர் நேற்று முன்தினம் பாளையங்கோட்டையை அடுத்த கீழநத்தம் பகுதிக்கு ஒரு துக்க வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். பாளையங்கோட்டை பொட்டல் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதியது.

இதில் தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முத்துவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்