சமையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

மானூர் அருகே சமையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-03 19:11 GMT

மானூர்:

மானூர் அருகே உள்ள குறிச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (வயது 40). சமையல் தொழிலாளி. குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவர் அதனை மறக்க சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் அதிக அளவில் மது குடித்துள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்ததும் மானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்துல்ரஹீம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்துல்ரஹீமுக்கு கயிர்நிஷா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்