ஜான்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.

Update: 2022-11-15 20:40 GMT

இட்டமொழி:

பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி செயலர் கே.பி.கே.செல்வராஜ் தலைமை தாங்கினார். திருமண்டல உப தலைவர் சுவாமிதாஸ், குருத்துவ காரியதரிசி பாஸ்கர் கனகராஜ், பொருளாளர் ஏ.டி.ஜே.சி.மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சுதாகர் ஐசக் அனைவரையும் வரவேற்றார். நெல்லை திருமண்டல பேராயர் ஏ.ஆர்.ஜி.எஸ்.டி.பர்னபாஸ் 882 மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசினார்.

விழாவில் குருவானவர் பிச்சமுத்து அருள்ராஜ், திருமண்டல செயற்குழு உறுப்பினர்கள் சாலமோன் டேவிட், சாமுவேல் பாஸ்கர், ராஜபாண்டி, பால்பாண்டி, கடையம் தாமஸ், புளியங்குடி மெல்கி, தாளாளர்கள் ஜெகன், சாலமோன் ஜெயபால்ராஜ், மோகன், ஆர்.கே.ஜேக்கப், தென்காசி சைரஸ், பேராசிரியர்கள் பார்த்திபன், ராஜேஷ் ஆனந்தசெல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருள்ஞானம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்