அரசு மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா நடந்தது.

Update: 2023-04-19 18:45 GMT

பரமக்குடி, 

பரமக்குடியில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் வனஜா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ரவி கலந்து கொண்டு 575 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், கல்வி என்பது சமுதாயத்தின் அறியாமையை நீக்கும் மருந்து. கல்வியை கற்பிக்கும் குருவை சரியாக தேர்ந்தெடுக்காதவர்கள் கண்கள் இருந்தும் குருடர்கள் ஆவார்கள். திருமூலரின் சொல்லாட்சியை மேற்கோளாக எடுத்துக்கொண்டு ஆசிரியரும், மாணவரும் தங்களது கடமைகளையும், பொறுப்பையும் உணர்ந்து செயலாற்றினால் சமூகம் செம்மையுரும். இவ்வாறு அவர் பேசினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆங்கில துறைத் தலைவர் சூரிய பிரகாஷ் நாராயணன் செய்திருந்தார். இதில் கல்லூரி மாணவிகள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்