பட்டமளிப்பு விழா

மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.

Update: 2023-02-18 21:28 GMT

மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. தலைவர் செய்யது அகமது தலைமை தாங்கினார். அஸ்ஸாதிக் கல்வி கூட்டமைப்பு பொருளாளர் ஜாபர் சாதிக், கல்லூரி தாளாளர் குதா முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் ரஜப் பாத்திமா வரவேற்றார்.

ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அக்பர் அலி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 284 மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசினார்.

முன்னதாக கல்லூரி ஆண்டு விழா நடந்தது. ஆண்டு விழாவில் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

விழாக்களில் எம்.கே.எம்.புகாரி, எம்.கே.எம்.முகமது ஷாபி, மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மீரான்மைதீன், மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல தலைவர் கதிஷா இக்லாம் பாஷிலா, கவுன்சிலர்கள் ரசூல்மைதீன், முகைதீன் அப்துல் காதர், சேக் மன்சூர், சகாய ஜூலியட் மேரி, அஸ்ஸாதிக் கல்வி கூட்டமைப்பு உறுப்பினர்கள் நிஜாமுதீன், காதர், வி.எஸ்.டி.அமானுல்லாஹ், காஜா நிஜாமுதீன், முகமது ஹனீப் மற்றும் நிஜார், அனிஸ்பாத்திமா, அந்தோணி செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்