பட்டமளிப்பு விழா
வாலாஜா பரிமளா பாண்டுரங்கன் கல்வி குழுமத்தில் பட்டமளிப்பு விழா நடபெற்றது.
வாலாஜாவில் உள்ள பரிமளா பாண்டுரங்கன் கல்வி குழுமத்தின் பாரா மெடிக்கல் கல்லூரி மற்றும் ஏ.என்.எச். மாணவ -மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. கல்வி குழும நிறுவனர் பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். தலைவர் கார்த்திக் கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். செயலாளர் சந்தியா கார்த்திக் கிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீரங்க பூபதி கல்வி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் அரங்க பூபதி கலந்து கொண்டு மாணவ -மாணவிகளுக்கு பட்டயச் சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் கல்லூரி முதல்வர்கள், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.