தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு:குழாய்களை உடைத்து சேதப்படுத்திய விவசாயி

கூடலூரில் தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் விவசாயி குழாய்களை உடைத்து சேதப்படுத்தினார்.

Update: 2023-01-03 18:45 GMT

கூடலூர் 12-வது வார்டு ஜோத்து கவுடர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 55) விவசாயி. இவர், கூடலூர் தெற்கு பகவதி அம்மன் கோவில் அருகே உள்ள ஒரு தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவரது தோட்டத்திற்கு அருகே குணசேகரன் என்பவருக்கு விவசாய நிலம் உள்ளது. அங்கு உள்ள கிணற்றில் இவர்கள் இருவருக்கும் தண்ணீர் பாய்ச்சும் உரிமம் உள்ளது என தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் லோயர்கேம்ப் போலீஸ் நிலையத்தில் கிருஷ்ணமூா்த்தி ஒரு புகார் கொடுத்தார். அதில், எனது தோட்டத்தில் யாரும் இல்லாதபோது தண்ணீர் பாய்ச்ச கொண்டு செல்லும் குடிநீர் குழாய்களை குணசேகரன் உடைத்து சேதப்படுத்தியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்