சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

Update: 2023-06-13 22:02 GMT

சிவகாசி,

சிவகாசி தலைமை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் 25-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் துப்புரவு பணி, சமையல் மற்றும் பாதுகாவலர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாத ஊதியம் ரூ.9 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தற்பொழுது ரூ.7 ஆயிரம் மட்டுமே சம்பளமாக தருவதாக புகார் எழுந்துள்ளது. இதை ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சிவகாசி அரசு ஆஸ்பத்திரியின் முன்பு ஒப்பந்த ஊழியர்கள் நேற்று காலை பணிகளை புறக்கணித்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்