மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளி பலி

கொள்ளிடம் அருகே மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளி பலியானார்

Update: 2023-05-06 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளி பலியானார்.

ஒப்பந்த தொழிலாளி

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே திருக்கருக்காவூர் ஊராட்சி கீராநல்லூர் கிராமம் மேல தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் அரவிந்த்ராஜ் (வயது22). இவர் மின்சார வாரியத்தில் கடந்த 2½ ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

கொள்ளிடம் அருகே பழையாறு சுனாமி நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் பின்புறம் புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்த பழைய மின்மாற்றிக்கு செல்லும் மின்சாரத்தை துண்டிக்கும் பணி நேற்று நடந்தது.

மின்சாரம் தாக்கியது

இந்த பணியில் அரவிந்த்ராஜ் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அரவிந்த்ராஜை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அரவிந்த்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்