தொடர் கனமழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 31,944 கன அடியாக உயர்வு
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 70.41 அடியாக உள்ளது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து வேகமாக அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்வரத்து வினாடிக்கு 3,372 கன அடியில் இருந்து 31,944 கன அடியாக உயர்ந்துள்ளது.
அணையின் நீர்மட்டம் 70.41 அடியாக உள்ளது. அணையில் தற்போது 11.12 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ள நிலையில், அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.