மணலி அருகே கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்தது - டிரைவர் காயம்

மணலி அருகே கன்டெய்னர் லாரி திடீரென கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்தது. இதில் டிரைவர் காயம் அடைந்தார்.

Update: 2022-08-13 06:37 GMT

மணலி விரைவு சாலையில் ஜோதி நகர் அருகே தனியார் டிரான்ஸ்போர்டுக்கு சொந்தமான கன்டெய்னர் லாரியை சாலையோரம் நிறுத்தி பழுது பார்த்தனர். திடீரென கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்த டிரைவர் சபரிநாதன் (வயது 42) மீதும் தீப்பிடித்தது. உடனடியாக கீழே குதித்து உயிர் தப்பினார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். காயம் அடைந்த சபரிநாதன், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி எண்ணூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதேபோல் சென்னை கே.கே.நகரில் இருந்து குப்பைகளை ஏற்றிக்கொண்டு பெருங்குடி குப்பை கிடங்கிற்கு சென்ற மாநகராட்சி தனியார் ஒப்பந்த குப்பை லாரி நள்ளிரவில் கிண்டி ஹால்டா அருகே வந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. கிண்டி தீயணைப்பு வீரர்கள் அரை மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்