காட்டுப்புத்தூர் அருகே நாகையநல்லூர் ஊராட்சி கல்லூர்பட்டியில் ரீபைனரிங் ஆயில் கம்பெனி உள்ளது. இங்கு தொழிலாளர்கள் தங்க 3 கன்டெய்னர் உள்ளன. இதில் ஒரு கன்டேயினரில் வட மாநில தொழிலாளர்கள் 3 பேர் தங்கி உணவு சமைத்து சாப்பிட்டு வந்தனர். நேற்று மாலையில் சமையலுக்கு வைத்திருந்த சிலிண்டர் டியூப்பில் திடீரென தீ பிடித்தது. இதில் பயந்து போன வட மாநில தொழிலாளர்கள் கன்டெய்னரில் இருந்து வெளியே ஓடிவந்தனர். இதைத்தொடர்ந்து தீ மளமளவென்று பரவியது. தகவல் அறிந்த முசிறி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை மேலும் பரவவிடாமல் தடுத்து அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் கன்டெய்னரில் இருந்த சமையல் பாத்திரங்கள், மின்விசிறி, பிளைவுட் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.