மண்டல அளவிலான மின்நுகர்வோர் பாதுகாப்புக்குழு கூட்டம்; கடலூரில் 23-ந்தேதி நடக்கிறது

மண்டல அளவிலான மின்நுகர்வோர் பாதுகாப்புக்குழு கூட்டம் கடலூரில் 23-ந்தேதி நடக்கிறது.

Update: 2023-06-19 20:44 GMT

விழுப்புரம் மண்டல அளவிலான மின் நுகர்வோர் பாதுகாப்புக்குழு கூட்டம் (ஏப்ரல் -ஜூன்-2023 காலாண்டு) கடலூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணிக்கு நடக்கிறது. கூட்டத்துக்கு விழுப்புரம் தலைமை பொறியாளர் தலைமை தாங்குகிறார். ஆகவே மின் வாரியத்துறை தொடர்பான ஏதேனும் சந்தேகம் இருந்தால், பதிவு பெற்ற பாதுகாப்பு குழுக்கள் கடலூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், 230, கே.வி. தானியங்கி துணை மின் நிலைய வளாகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், கேப்பர் மலை, கடலூர் என்ற முகவரிக்கு நாளைக்குள் (புதன்கிழமை) அனுப்பி வைக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04142-223132, 223969 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவலை கடலூர் மேற்பார்வை பொறியாளர் சதாசிவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்