நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
விருதுநகர் அருகே உள்ள செந்நெல்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியை லட்சுமி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட நுகர்வோர் கண்காணிப்பு குழு உறுப்பினர் அழகு சுந்தரம், தாலுகா குழு உறுப்பினர் வெங்கடேசன், நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, துணை தலைவர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முகாமில் விருதுநகர் வட்ட வழங்கல் அலுவலர் ரமணன் மற்றும் பஞ்சாயத்து தலைவர் சக்திவேல் ஆகியோர் மாணவர்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை எடுத்துரைத்தனர். முடிவில் பள்ளி ஆசிரியை உமாதேவி நன்றி கூறினார்.