நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயற்குழு கூட்டம்

நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயற்குழு கூட்டம்

Update: 2022-06-06 13:13 GMT

கோத்தகிரி

கோத்தகிரியில் புளூ மவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கிளப் ரோடு பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார். தமிழ்நாடு நுகர்வோர் அமைப்பின் துணைத்தலைவரும், சங்கத்தின் செயலாளருமான ராஜன் முன்னிலை வகித்தார். கூடுதல் செயலர் முகமது சலீம் வரவேற்றார். கூட்டத்தில், கோத்தகிரி பகுதியில் மின் மயானம் அமைக்க வேண்டும், நேரு பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வண்ண மீன்கள் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும், கோத்தகிரி முகப்பு பகுதியில் அலங்கார வளைவை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து கோத்தகிரி பேரூராட்சிக்கு புதியதாக தேர்வு செய்யப்பட்ட தலைவர், துணைத்தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர்கள் கவுரவிக்கபட்டனர். இதில் சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டனர். முடிவில் இணை செயலாளர் வினோபா பாப் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்