நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-10-02 21:39 GMT

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி கோர்ட்டு வளாகத்தில் உள்ள மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மண்டல தலைவர் வேலு தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சீனிவாசன், மாநில செயலாளர் ராசப்பன், மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் கலந்து கொண்டு பேசினர். நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்