நுகர்வோர் மன்ற கூட்டம்
கரியசோலை அரசு பள்ளியில் நுகர்வோர் மன்ற கூட்டம் நடந்தது.
பந்தலூர்
பந்தலூர் அருகே கரியசோலை அரசு உயர்நிலை பள்ளியில் ரத்த தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் என்ற தலைப்பில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை ஆசிரியர் புளோரா குளோரி தலைமை தாங்கினார். ஆசிரியர் மார்க்ரேட் மேரி முன்னிலை வகித்தார். நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர் மணிவாசகம் கூட்டத்தின் நோக்கம் மற்றும் குடிமக்கள் மன்ற செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார். நெலாக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய இடைநிலை சுகாதார பணியாளர் மகரஜோதி, ஆஷா பணியாளர் தமிழரசி கலந்துகொண்டு ரத்த தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் குறித்து பேசினர். தொடர்ந்து மாணவர்கள் ரத்த தானம், உடல் உறுப்பு தானம் செய்வோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் ஆசிரியர்கள் நிஷாத், மேகலா மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் ஆசிரியை நிரோஷா நன்றி கூறினார்.