கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க நுகர்வோர்கள் கோரிக்கை

கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க நுகர்வோர்கள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-30 18:54 GMT

செந்துறை:

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் செந்துறை தாலுகாவில் உள்ள கியாஸ் சிலிண்டர் இணைப்பு பெற்ற பயனாளிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை பதிவு செய்தனர். கியாஸ் இணைப்பு வழங்கும் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய பலர் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்