நுகர்வோர் விழிப்புணர்வு ஓவிய கண்காட்சி
திருவாரூரில் நுகர்வோர் விழிப்புணர்வு ஓவிய கண்காட்சி நடந்தது.
திருவாரூரில் உள்ள தனியார் கல்லூரியில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஓவிய கண்காட்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் தலைமை தாங்கினார். மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கீதா ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் பாக்கியலட்சுமி வரவேற்றார். மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் கருப்பையா, நுகர்வோர் பாதுகாப்பு குறித்து பேசினார். மேலும் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது குறித்தும், பொருட்களை கடையில் வாங்கும் போது தரம் முத்திரைகளை பாா்த்து வாங்குவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளின் மாணவ- மாணவிகளின் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த ஓவியங்கள் வரைந்து காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. முடிவில் கல்லூரி துணை முதல்வர் நன்றி கூறினார்.