வெளிமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
தேனியில் வெளிமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நாளை நடக்கிறது.
தேனி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி மாவட்டத்தில் உள்ள கடைகள், உணவு நிறுவனம் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணி புரியும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்வது தொடர்பாகவும் அவர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாகவும் ஆலோசனை கூட்டம் ஒருங்கிணைந்த தொழிலாளர் அலுவலர் அலுவலக கட்டிட வளாகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. கூட்டத்துக்கு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவக்குமார் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் கடைகள், உணவு நிறுவனம் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் தொடர்பான சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.