தேர் வெள்ளோட்டம் குறித்து ஆலோசனை கூட்டம்

தேசூர் காசி விசுவநாதர் கோவில் தேர் வெள்ளோட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-03-10 12:03 GMT

சேத்துப்பட்டு

தேசூர் பேரூராட்சியில் உள்ள இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான காசி விஸ்வநாதர் கோவில் மரத்தேர் வெள்ளோட்டம் விடுவது குறித்தும், ரேணுகாம்பாள் கோவில் புதுப்பிப்பது பற்றியும், திருமால்பாடி ரங்கநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது பற்றியும் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதையொட்டி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மு.ஜோதி, லட்சுமி, செயல் அலுவலர் சரண்யா லட்சுமி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.வி.சேகரன் மாவட்ட அறங்காவலர் உறுப்பினர் என்.பாண்டுரங்கன் ஆகியோர் கொண்ட குழுவினர் தேசூருக்கு வந்தனர்.

அவர்களை நகர செயலாளர் மோகன், பேரூராட்சி கவுன்சிலர்கள், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் பொறுப்பாளர் மனோகரன் சிவசுப்பிரமணியர் கோவில் நிர்வாகி சிவா மற்றும் ஊர் பொதுமக்கள் வரவேற்றனர்.

பின்னர் தயார் நிலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மரத்தேரை பார்வையிட்டு வெள்ளோட்டம் விடுவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

மேலும் பழமை வாய்ந்த ரேணுகாம்பாள் கோவிலை புதுப்பிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் காசி விஸ்வநாதர் கோவிலை சுற்றிப் பார்த்தனர்.

அப்போது வந்தவாசி இந்துசமய அறநிலையத்துறை ஆய்வாளர் நடராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்